சூடான செய்திகள் 1

மெத்சிறி செவன இன்று பொதுமக்களிடம் கையளிப்பு…

(UTV|COLOMBO) தேசிய சிறுநீரக நிதியத்தின், அநுராதபுரம் பொது வைத்தியசாலையுடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ‘மெத்சிறி செவன’ சிறுநீரக நோயாளர் பராமரிப்பு, நலன்பேணல் மற்றும் ஆராய்ச்சி நிலையம் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இந்த நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளதாக, ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த ஆராய்ச்சி நிலையம் 437 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிதியத்தின் ஏற்பாடுகளை பயன்படுத்தி சிறுநீரக நோயாளிகளின் நலன்பேணல்கள் மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல், சிறுநீரக நோய் அச்சுறுத்தல் உள்ள பிரதேசங்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுத்தப்படவுள்ளன.

 

 

 

 

Related posts

☺️ புத்தாண்டின் பின் முக்கிய அரசியல் சம்பவங்கள்!!!

எட்டு பேர் வெளியே, 16 பேர் மீண்டும் உள்ளே

14 ஆம் திகதிக்கு முன்னர் புதிய அமைச்சரவை நியமனம்-அமைச்சர் ராஜித