சூடான செய்திகள் 1

4 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய வசந்த கரன்னாகொட

(UTV|COLOMBO) கடற்படையின் முன்னாள் தளபதி அத்மிரால் வசந்த கரன்னாகொட சுமார் நான்கு மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

அவர் இன்றைய தினம் 3வது தடவையாகவும் முற்பகல் 9.30அளவில் குற்ற புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் அவர் அந்த திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.

2008 -2009 ஆண்டுக்காலப்பகுதியில் 11 இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

(UPDATE)-கோட்டா CID யில் ஆஜர்

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி இரு வாரங்களுக்குள்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு