பாப் இசை உலகின் மன்னரான மைக்கேல் ஜாக்சன், கடந்த 2009-ம் ஆண்டு மாரடைப்பால் இறந்தார். இவரது பாடல்கள் உலகம் முழுவதும் தற்போதும் ஒளித்து வருகிறது. இவருக்கு முழுவதும் ஜாக்சன் என்ற மகளும், ஜோசப் ஜாக்சன் மற்றும் பிரின்ஸ் ஜாக்சன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.
மாடல் அழகியான பாரிஸ் ஜாக்சன், தனக்கு அதிக மனரீதியிலான பிரச்சினை இருப்பதாக அவரே கூறியிருக்கிறார். சமீபத்தில் வெளியான, லீவிங் நெவர்லேண்ட் (Leaving Neverland) என்ற ஆவணப்படம் மைக்கேல் ஜாக்சன், சிறுவர்களைத் தவறாகப் பயன்படுத் தியதாகப் புகார் கூறியிருந்தது.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த மைக்கேல் ஜாக்சன் மகளும் பிரபல மாடலுமான, பாரிஸ் ஜாக்சன் மன உளைச்சலில் இருந்தார் என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் பாரிஸ் ஜாக்சன், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் கை நரம்பை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாகவும், பின்னர் அவர் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
இதற்கு முன்பும் சிலமுறை தற்கொலைக்கு முயன்றுள்ளார் பாரிஸ் ஜாக்சன். இந்த நிலையில் மீண்டும் அவர் தற்கொலைக்கு முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், தான் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான செய்தி பொய்யானது என பாரிஸ் ஜாக்சன் டுவிட்டரில் தெரிவித்தார்.