சூடான செய்திகள் 1

பெரும்பாலான மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO) இன்று(17) முதல் இரண்டு நாட்களுக்கு குறிப்பாக மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றதாக வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல இடங்களில் இன்று பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு கரையோரப் பகுதிகளிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் தென்மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீஅளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

 

 

Related posts

இலங்கை மண்ணில் தங்கம்

விசாக பூரணை காரணமாக 4 நாட்கள் மதுபானசாலைகளுக்கு பூட்டு

ஆகஸ்ட் மாதம் 06ஆம் திகதி க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆரம்பம்