(UTV|INDIA) மும்பை ரயில் நிலையம் முன்பாக உள்ள பாலம் உடைந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்ததோடு 34 பேர் காயம் அடைந்தனர்.
மும்பையில் சத்ரபதி சிவாஜி மகராஜ் ரயில் நிலையம் முன்பாக நேற்றிரவு 7.30 மணிக்கு குறித்த பாலம் உடைந்து விழுந்ததாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலத்தின் மேல் நடந்து சென்று கொண்டிருந்த பயணிகள் மொத்தமாக கீழே விழுந்தனர். இதில் 5 பேர் உயிரிழந்தாகவும், 34 பேர் படுகாயம் அடைந்து அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.