சூடான செய்திகள் 1

கென்யா ஜனாதிபதி உஹரு கென்யாட்டாவை சந்தித்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

(UTV|COLOMBO) ஐக்கிய நாடுகளிள் சுற்றாடல் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நைரோபி சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று கென்யா ஜனாதிபதி உஹரு கென்யாட்டாவை சந்தித்துள்ளார்.
இதன்போது, ஐக்கிய நாடுகள் சுற்றாடல் மாநாட்டின் நான்காவது அமர்வை வெற்றிகரமான முறையில் ஏற்பாடு செய்திருந்தமை தொடர்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.
அந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயற்படுத்துவதற்கு உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கை அரப்பணிப்புடன் செயற்படும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் மாநாட்டில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் ஆற்றப்பட்ட உரையை பாராட்டிய கென்யா ஜனாதிபதி, ஜனாதிபதியின் சூழல்நேய செயற்பாடுகளையும் பாராட்டியுள்ளார்.
இதுதவிர இருநாடுகளுக்கிடையிலான பரஸ்பர ஒத்துழைப்புகள் எதிர்காலத்தில் மேலும் விரிவடையும் என்று கென்யா ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கென்யா மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் ஏற்படுத்தி கொண்ட ஒத்துழைப்புகளை முன்னெடுத்து செல்வது தொடர்பிலும் இரண்டு நாட்டு தலைவர்களும் அவதானம் செலுத்தியுள்ளனர்.
அத்துடன் இரண்டு நாடுகளும் சர்வதேச ரீதியாக ஒத்துழைப்புடன் செயற்படவுள்ளதாகவும் இலங்கை மற்றும் கென்யா ஜனாதிபதிகள் உறுதியளித்துள்ளனர்.

Related posts

களுகங்கை நீர்த்தேக்கத்தில் மங்கள நீர் நிரப்பல் விழா உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது

பிரபல நடிகர் மற்றும் பாடகர் திடீரென மரணம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை