கிசு கிசு

போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களுக்கு தடை?

(UTV|AMERICA) இந்தோனேசியாவில் நடைபெற்ற விமான விபத்துக்கும், எத்தியோப்பியா விமான விபத்துக்கும் சம்பந்தம் இருப்பதாக  அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு செயதிகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களுக்கு அமெரிக்காவும் தடை விதிப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், போயிங்737 மேக்ஸ் ரக விமானங்களை கொள்வனவு செய்வதற்குமான  உத்தரவையும் அந்நாட்டு விமான போக்குவரத்து நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

விபத்துக்குள்ளான இரு விமானங்களும் தரையிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்தில் சிக்கியுள்ளன. போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளானதன் எதிரொலியாக, போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் பயன்படுத்த ஒவ்வொரு நாடுகளாக தடை விதித்து வருகிறது.

இந்தியா,எத்தியோப்பியா,சீனா, சிங்கப்பூர், பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பிரேசில், பிரான்சு உள்ளிட்ட நாடுகள் தடை விதித்துள்ளன.

எத்தியோப்பியாவில் கடந்த 10 ஆம் திகதி போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் தரையிலிருந்து பறக்க தொடங்கிய 6 நிமிடங்களில் கீழே விழுந்ததில் 157 பேர் உயிரிழந்தனர். இதே ரக விமானம் கடந்த 5 மாதங்களுக்கு முன் இந்தோனேஷியாவில் தரையிலிருந்து புறப்பட்ட 13 நிமிடங்களில் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 189 பேர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

மக்களே மிகுந்த அவதானம் தேவை!!

குழந்தை முன்னே.. திருமணம் பின்னே

உயிராபத்தைக் காட்டி என் பயணத்தை நிறுத்த முடியாது