வகைப்படுத்தப்படாத

13 மாவட்டங்களில் குடி நீர் தட்டுப்பாடு

(UDHAYAM, COLOMBO) – வறட்சியான காலநிலை காரணமாக 17 மாவட்டங்களை சேர்ந்த 3 இலட்சத்து 20 ஆயிரத்து 461 குடும்பங்களை சேர்ந்த 12 இலட்சத்து 23 ஆயிரத்து 568 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

இதில் குடிநீர் பிரச்சினைக்கு சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை , களுத்துறை , கம்பஹா , ஹம்பாந்தோட்டை , அனுராதபுரம் , யாழ்ப்பாணம் , முல்லைத்தீவு , கிளிநொச்சி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நேரடி நீர் பிரச்சினை காணப்படுவதாக அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

அனர்த்தத்திற்கு உள்ளாகும் பகுதிகளை வரைபடமாக்கும் பணிகள் காலியில் ஆரம்பம்

ஜனாதிபதிக்கு அவுஸ்ரேலியாவில் அமோக வரவேற்பு

விடுமுறையில் இருக்கும் மருத்துவ அதிகாரிகள் அனைவரும் சேவைக்கு சமூகமளிக்குமாறு கோரிக்கை