வகைப்படுத்தப்படாத

சைட்டம் தொடர்பாக முக்கிய தகவலை வௌியிட்ட கோப் குழு

(UDHAYAM, COLOMBO) – மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை பல்கலைக்கழகமாக ஏற்றுக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவிப்புகள் எவையும் வெளியாக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

கோப் குழு எனப்படும் பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக் குழு நேற்று கூடிய போது, இந்த விடயம் வெளிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்தக் குழுவின் உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.

கோப் குழுவானது, நேற்றையதினம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னாள் இந்நாள் அதிகாரிகளையும், உயர் கல்வி அமைச்சின் முன்னாள் இந்நாள் அதிகாரிகளையும் அழைத்து வாக்கு மூலம் பதிவு செய்தது.

இதன்போது சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு பட்டமளிப்பை வழங்க அனுமதிப்பது தொடர்பான வர்த்தமான அறிவிப்பு தொடர்பில் பாரிய சிக்கல்கள் வெளிப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி பல்வேறு குழுக்களை அழைத்து விசாரணை செய்ய தீர்மானித்துள்ளதாகவும், முதல் விசாரணை எதிர்வரும் 20ம் திகதி நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related posts

Person shot while trying to enter school dies

Former Rakna Lanka Chairman remanded

மழையுடன் கூடிய காலநிலை