விளையாட்டு

இந்தியா ராணுவ தொப்பி விவகாரம்-ஐ.சி.சி வழங்கிய பதில் இதோ…

இந்தியா – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் அண்மையில் நடைபெற்றது.

இந்த போட்டியின்போது இந்திய அணி வீரர்கள் புல்வாமா தாக்குதலில் மரணம் அடைந்த பாதுபாப்பு படையினருக்கு மரியாதை செலுத்தும் வகையில், ராணுவ தொப்பியை அணிந்து விளையாடினர்.

அத்துடன், அன்றைய போட்டிக்கான தமது வேதனத்தை புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த படையினரின் குடும்பங்களுக்கு வழங்குவதாக தெரிவித்தனர்.

எனினும், அந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் அரசாங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், சர்வதேச கிரிக்கட் பேரவையிடம் விளக்கம் ஒன்றையும் கோரியிருந்தது.

இந்தநிலையில், இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை, சர்வதேச கிரிக்கட் பேரவையிடம் முன்கூட்டியே ஆலோசித்தே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

Related posts

இலங்கை அணிக்கு தலைவராக லசித் மாலிங்க

பங்களாதேஷை வீழ்த்திய நியூஸிலாந்து

அர்ஜுன தலைமையில் இலங்கை கிரிக்கெட்டுக்கான இடைக்காலக் குழு – ரொஷான் ரணசிங்க