சூடான செய்திகள் 1

எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் மாத்தறையிலிருந்து பெலியத்த வரையான ரயில் சேவை ஆரம்பம்

(UTV|COLOMBO) எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் மாத்தறையிலிருந்து பெலியத்த வரையான புகையிரத சேவை ஆரம்பமாகவுள்ளது.

இதன்படி, தற்போது கரையோர மார்க்கமாக கொழும்பு – கோட்டையிலிருந்து மாத்தறை வரை பயணிக்கும் அனைத்து ரயில்களும் பெலியத்த வரை பயணிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.பெலியத்த வரையான தூரம் 26 கிலோமீற்றர்களாகும்.

இலங்கையில் மிக நீளமான சுரங்க ரயில் பாதை மாத்தறை – பெலியத்த பாதையிலேயே அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த ரயில் மார்க்கத்தில், கெகணதுர, பம்பரென்த, வெவுருகன்னல, பெலியத்த ஆகிய ரயில் நிலையங்களும் பிலதுவ மற்றும் வெஹெரஹேன ஆகிய உப ரயில் நிலையங்களும் உள்ளடங்குகின்றன.

 

 

 

 

 

 

Related posts

மன்னம்பிட்டில் பாலத்தில் குடும்பத்திற்கு 1 இலட்சம்!

ஹெரோயினுடன் மூவர் கைது

வேதன அதிகரிப்பு தொடர்பில் இன்றைய தினம்(06) கலந்துரையாடல்