சூடான செய்திகள் 1

நாளை (13) ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில்

(UTV|COLOMBO) நாளை(13)  ஆசரியர் சேவை சங்கங்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நுகேகொட, பதுளை, பண்டாரகம, கண்டி, தங்காலை, புத்தளம், மொனராகலை, வெல்லவாய, மொறவக, இரத்தினபுரி உள்ளிட்ட 20 பிரதான நகரங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட உள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

22 ஆண்டுகளாக ஆசிரியர்-அதிபர் சேவை சம்பளத்தில் காணப்படுகின்ற முரண்பாட்டை தீர்க்காமை, 03 மாத காலத்தின் நிலுவைத்தொகையை வழங்காமை உள்ளிட்ட பிரதான காரணங்களை முன்வைத்து இந்த எதிரப்பு நடவடிக்கை முன்னேடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

 

Related posts

புனித துல் ஹஜ் பெருநாளுக்கான திகதி அறிவிப்பு

அமிதாப் பச்சனுக்கு 75% கல்லீரல் கெட்டுவிட்டது! ; அதிர்ச்சியில் ரசிகர்கள்

“மக்கள் பேரணி கொழும்புக்கு” இன்று