(UTV|COLOMBO) சக்யா உயர்கல்வி நிறுவனத்தின் மாணவர் கௌரவிப்பு விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றுள்ளது.
2017 மற்றும் 2018ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள சக்யா உயர் கல்வி நிறுவனத்தின் மாணவ மாணவியரை பாராட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு நேற்று முன்தினம் (08) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்துகொண்டார்.
உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சித்தியெய்திய சக்யா மாணவ மாணவியருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், பரீட்சைகளில் வெற்றி பெறுவதைப்போன்று வாழ்க்கையிலும் வெற்றி பெறுவதற்கான வழிகாட்டல்களை பிள்ளைகளுக்கு வழங்க வேண்டியது தனியார் கல்வி நிறுவனங்களின் பொறுப்பாகுமெனக் குறிப்பிட்டார்.
சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி அவர்கள் சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் குமாரசிறி சிறிசேன உள்ளிட்ட அதிதிகளும் சக்யா குழுமத்தின் தலைவர் பண்டார திசாநாயக்க உள்ளிட்ட பணிப்பாளர் சபை உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.