சூடான செய்திகள் 1

ஐக்கிய நாடுகள் சபையின் உப குழு அடுத்த மாதம் இலங்கை விஜயம்…

(UTV|COLOMBO) சித்திரவதைகள் தடுப்புக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உப குழு அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அலுவலகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

குறித்த விஜயத்தின் கால எல்லை உட்பட ஏனைய விபரங்கள் அறிவிக்கப்படும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் ஜெனிவாவில் இடம்பெற்ற உபகுழுவின் உள்ளக உயர்மட்ட கூட்டத்தில் இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சித்திரவதைகள் தடுப்புக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உப குழுவானது, ஆர்ஜண்டீனா, பலஸ்தீனம், பல்கேறியா, கபோ வார்டே, கானா, செனகல் மற்றும் பிரித்தானிய ஆகிய நாடுகளுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சில பிரதேசங்களுக்கு 06 மணி நேர நீர் வெட்டு…

சமூர்த்தி கொடுப்பனவு நிகழ்வு இன்று ஆரம்பம்

சித்திரை புத்தாண்டு புண்ணியகாலம்…