வகைப்படுத்தப்படாத

அமெரிக்கா மீது ஹூவாய் நிறுவனம் வழக்கு

சீனாவை சேர்ந்த பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனம் ஹூவாய் நிறுவனம் அமெரிக்க அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. 

ஹூவாய் நிறுவனம், அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை மீறி ஈரானுடன் வர்த்தகம் வைத்துக்கொண்டதாக புகார் எழுந்தது.

இதனால் ஹூவாய் நிறுவன அதிபரின் மகளும், நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியுமான மெங்வான்ஜவ் கனடா நாட்டின் வான்கூவர் நகரில் கடந்த டிசம்பர் மாதம் முதலாம் திகதி கைது செய்யப்பட்டார்.

மேலும் ஹூவாய் நிறுவனம் தனது தொலை தொடர்பு சாதனங்கள் மூலம் சீனாவுக்காக உளவு பார்ப்பதாக குற்றம் சாட்டிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அந்நிறுவனத்தின் பொருட்களை அமெரிக்காவில் பயன்படுத்த தடை விதித்தது.

இந்த நிலையில், தங்கள் நிறுவனத்தின் பொருட்களை பயன்படுத்த தடைவிதித்தது தொடர்பாக அமெரிக்க அரசு மீது ஹூவாய் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் பிளானோ மாவட்ட நீதிமன்றத்திலேயே வழக்கு தொடர்ந்திருப்பதாக ஹூவாய் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

Related posts

සමන් දිසානායක CID අත්අඩංගුවට.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்கிறார் டிரம்ப்

‘Sectors affected by 04/21 to be normalised by August’