சூடான செய்திகள் 1

கல்வியமைச்சருக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானம்

(UTV|COLOMBO) கடந்த 2015/2018 காலப்பகுதிகளில் ஊழல் மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை குழுவிடம் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ முன்வைத்த முறைப்பாடு குறித்து விசாரணைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் சுரக்ஷா காப்புறுதி யோசனை முறைமைக்கு 2300 மில்லியன் ரூபா விரயமாகியுள்ளதாகவும், இதன் மூலம் மாணவர்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படவில்லை எனவும் குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 2018 ஆம் ஆண்டு 29 மில்லியன் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளதுடன் அதில் அமைச்சரின் புகைப்படம் மற்றும் வாழ்த்து செய்தி வெளியீடு மூலம் பொதுமக்களின் பணம் முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும்,
பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர் முறைமை காரணமாக மேலதிகமாக 538 மில்லியன் ரூபா ஒதுக்க நேரிட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

இன்றைய காலநிலை…

தேர்தலில் களமிறங்கும் ரணில்!

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு