வகைப்படுத்தப்படாத

தொடரும் மழை

(UDHAYAM, COLOMBO) – நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியக்கூடும்; என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் நண்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.

மன்னாரிலிருந்து பொத்துவில் ஊடாக கொழும்பு காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய இடங்களின் பல கடற்கரையோர பகுதகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தென்கிழக்கு பகுதிகளில் 20 தொடக்கம் 30 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related posts

தீப்பற்றி எரியும் MT New Diamond

දිස්ත්‍රික්ක හතකට නායයෑම් අනතුරු ඇඟවීම්

கலைஞர் மு. கருணாநிதி காலமானார்