வகைப்படுத்தப்படாத

மொடல் அழகி உலகின் இளம் செல்வந்தரானார்…

(UTV|AMERICA)  உலகின் இளம் செல்வந்தர் என்ற தகுதியை அமெரிக்காவை சேர்ந்த மொடல் அழகியும், தொலைக்காட்சி நடிகையுமான கெய்லி ஜென்னர் பெற்றுள்ளார்   என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வர்த்தக பத்திரிகையான போர்ப்ஸ், 2019ஆம் ஆண்டுக்கான உலக பணக்காரர்கள் பட்டியலை நேற்று முன்தினம் வெளியிட்டது.

அமெரிக்காவை சேர்ந்த மொடல் அழகியும், தொலைக்காட்சி நடிகையுமான 21 வயதான கெய்லி ஜென்னர்  சுய சம்பாத்தியத்தில் உலகின் இளம் செல்வந்தர் என்ற தகுதியைப் பெற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த 2016ஆம் ஆண்டில் தனது பெயரில் தொடங்கிய அழகு சாதன பொருட்களை தயாரிக்கும் நிறுவனம், பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று இலாபங்களை அள்ளிக்குவித்தது. தற்போது கெய்லி ஜென்னரின் சொத்து மதிப்பு சுமார் 100 கோடி டொலர் என போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

 

 

Related posts

தபால் மூல வாக்களிப்பு நேற்று ஆரம்பம்

இதே நாளில் 2001 ஆம் ஆண்டு

நேபாள ஜனாதிபதி – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா சந்திப்பு