(UTV|COLOMBO) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கமைய சட்டவிரோத மதுபானத் தாயரிப்பு சம்பந்தமான தகவல்களை வழங்குவதற்காக புதிய தொலைபேசி இலக்கங்கள் பொலிஸாரால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
அதன்படி 0113 024 820, 0113 024 848, 0113 024 850 என்ற இலக்கங்களுக்கு பொதுமக்கள் சட்டவிரோத மதுபானம் சம்பந்தமான தகவல்களை வழங்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.