கிசு கிசு

மரண தண்டனை வழங்கும் நாள் தீர்மானம்?

(UTV|COLOMBO) மரண தண்டனை வழங்கும் நாள் தீர்மானிக்கப்பட்டு விட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவன பிரதானிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில், போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற போவதாக ஜனாதிபதி அண்மையில் கூறியிருந்தார்.

இதனையடுத்து, தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வந்த நிலையில், அண்மையில் மரண தண்டனை கைதிகளின் விபரங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

அத்துடன், தூக்கு தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கும் விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், ஜனாதிபதியின் இந்த தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மனித உரிமைஅமைப்புகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு தேவைப்படாது?

மேல் மாகாண ஊரடங்கு தொடர்பிலான புதிய அறிவித்தல்

கொள்ளுப்பிட்டி பிராண்டிக்ஸ் 07 பேருக்கு கொரோனா : ஒருவர் தெஹிவளை