சூடான செய்திகள் 1

வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை

(UTV|COLOMBO) அரசாங்கம் முன் வைத்துள்ள வரவு செலவு திட்டம் வரவேற்கத்தக்க வகையில் அமைந்துள்ளது. இந்த முன்மொழிவுகளை எதிர் வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் நிறைவேற்றும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கடந்த வருடம் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்ட யோசனைகளை நடைமுறைப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகின்றது. இருந்த போதும் இம்முறை வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள முன் மொழிவுகளை எதிர் வரும் ஆகஸ்ட் மாத்தாத்திற்குள் நடைமுறைப்படுத்த அரசாங்கம் முயற்சிகளை எடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

கடந்த வரவு செலவு திட்ட முன் மொழிவுகளை நடைமுறைப்படுத்த முடியாமல் போனமைக்கு நாட்டில் ஏற்பட்ட அரசியல் சூழ்ச்சியும் காரணமாகும். இதனை படிப்பினையாகக் கொண்டு இந்த வரவு செலவுத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கும் என்றார்.

வரவு செலவு திட்டத்தில் சாதாரண மக்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அரச ஊழியர்கள், விவசாயிகளுக்கும் பல நன்மைகள் இருக்கின்றன.

அதே போன்று வடக்கில் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மக்களை மீளக்குடியேற்ற தேவையான வளங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வரவு செலவு திட்டம் வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளது எனவும் கூறினார்.

 

 

 

 

Related posts

ஜனாதிபதியினால் 38 சிரேஷ்ட இராணுவப் படை வீரர்களுக்கு பதவி உயர்வு

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது

இறுதியாண்டு பரீட்சைக்காக இன்று முதல் ஆரம்பம்