சூடான செய்திகள் 1

வைத்தியசாலைகளுக்கு வருகை தரும் முதியோர்த் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு

(UTV|COLOMBO) வைத்தியசாலைகளுக்கு வருகை தரும் முதியோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அவர்களுக்குத் தேவையான மருந்து, அவர்களது கிராமத்தில் வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்று ஹொரணை ஆதார வைத்தியசாலை மூலம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டொக்டர் தமர களுபோவில தெரிவித்துள்ளார்.

 8 கிராமங்களில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதற்கு ஏனைய வைத்தியர்களின் உடன்பாடும் கிடைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

நோயாளர்களுக்கு வழங்கப்படும் ஈ-ஹெல்த் அட்டை யின் ஊடாக விரைவாக சிகிச்சையை மேற்கொள்வதற்கு உதவியாக அமைகின்றது என்றும் வைத்தியர் களுபோவில குறிப்பிட்டார்.

இந்த தரவுகள் 10 வருட காலம் பாதுகாக்கப்படும். இந்த தரவுகளை நாட்டில் உள்ள எந்த வைத்தியசாலைகளினாலும் பெற்றுக் கொள்ள முடியும். இதற்கான மென்பொருள் 12 வைத்தியசாலைகளில் கணனிமயப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அபேக்ஷா வைத்தியசாலையில் சுமார் 4 இலட்சம் நோயாளர்களின் தகவல்களும், தரவுகளும் கணனி மயப்படுத்தப்பட்டுள்ளன.

 

 

 

Related posts

விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு விடுதலை…

குமார வெல்கம என் மீது கொண்ட அன்பே அவ்வாறு கூற காரணம்