வளைகுடா

ஜமால் கசோக்கியின் உடல் ஒவனில் வைத்து எரிக்கப்பட்டது?

துருக்கியிலுள்ள சவூதி தூதரகத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சவூதி ஊடகவியலாளர் ஜமால் கசோக்கி துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல் பாகங்கள் இஸ்தான்புல் நகரில் சவூதி துதரக ஆணையாளரின் வசப்பிடத்திலுள்ள பாரிய ஒவன் உபகரணத்தில் வைத்து எரித்து விட்டதாக  புதிய விசாரணையொன்றின் மூலம் அறிய முடிவதாக கடந்த ஞாயிற்று கிழமை இரவு வெளியான புதிய ஆவன நிகழ்ச்சியில் உரிமைக்கோரப்பட்டுள்ளது.

சவூதி அரேபிய தூதரகத்தில் இருந்து இடம்மாற்றப்பட்ட காஷோக்கியின் உடல் பாகங்கள் கொண்டவை என நம்பப்படும் பைகள் தூதரக ஆணையாளரின் இல்லத்துக்கு வெளியேயிருந்த பாரிய ஒவன் உபகரணத்தில் வைத்து எரித்ததை அதிகாரிகள் அவதானித்துள்ளாக ஆவன செய்திகள் தெரிவிக்கிறது.

ஜமால் கசோக்கியின் உடல் பாகங்கள் எரிக்கப்பட்டதை மறைக்க அதே உபகரணத்தில் வாட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜமால் கசோக்கியின் உடல் பாகங்கள் சுமார் மூன்று வாரங்கள் குறித்த அதே உபகரணத்தில் வைக்கப்பட்டு பகுதி பகுதியாக எரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் துருக்கி விசாரணையாளர்கள் தூதரக ஆணையாளரின் இல்ல சுவர்களில் கஷோக்கியின் ரத்தம் சிதறியிருப்பதை அதிகாரிகள்  கண்டறிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

ஜமால் கசோகி மிகவும் ஆபத்தானவர்!

ஹஜ் பயணிகளுக்காக சிறப்பு சலுகைகள்!

கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்