(UTV|AMERICA) பாலியல் குற்றச்சாட்டின் எதிரொலியாக கடந்த மாதம் 24ஆம் திகதிக்கு பிறகு ‘பிபிசி’ வானொலிவில் மைக்கல் ஜக்சனின் பாடல்கள் ஒலிபரப்பப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க பொப் பாடகர் மைக்கல் ஜக்சன். இவர் கடந்த 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் காலமானார்.
இந்த நிலையில் மைக்கல் ஜக்சனின் இசைக்குழுவில் பணியாற்றிய வேட் ராப்சன், ஜேம்ஸ் சேவ்சக் ஆகிய இருவர், சிறுவர்களாக இருந்தபோது மைக்கல் ஜக்சன் பலமுறை தங்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக சமீபத்தில் குற்றம் சாட்டினர்.
இதுதொடர்பாக ‘லீவிங் நெவர்லேண்ட்’ என்ற பெயரில் எடுக்கப்பட்ட ஒரு ஆவணப்படம் ஆங்கில தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. மைக்கல் ஜக்சனின் உறவினர்கள் அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டை மறுத்ததோடு, அந்த ஆவணப்படத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், குறித்த பாலியல் குற்றச்சாட்டின் எதிரொலியாக மைக்கல் ஜக்சனின் பாடல்களை ஒலிபரப்புவதை ‘பிபிசி’ வானொலி நிறுத்திவிட்டது. கடந்த மாதம் 24ஆம் திகதிக்கு பிறகு ‘பிபிசி’ வானொலியில் மைக்கல் ஜக்சனின் பாடல்கள் ஒலிபரப்பப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.