சூடான செய்திகள் 1

வரவு செலவு திட்டம் நாளை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

(UTV|COLOMBO) 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனை நாளை நிதி அமைச்சரினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நாளை பிற்பகல் 2 மணிக்கு நிதி அமைச்சர் வரவு செலவு திட்ட யோசனையை பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ள நிலையில் , இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு எதிர்வரும் 12ம் திகதி இடம்பெறவுள்ளது.

நிலையியற் குழுவின் விவாதம் எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் ஏப்ரல் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் மீதான வாக்கெடுப்பு அன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

 

 

 

Related posts

வெசாக் தின நிகழ்வுகள் நிமித்தம் அதிகபட்ச பாதுகாப்பு

காமினி செனரத் உள்ளிட்டோரின் வழக்கு தினம் தோறும் விசாரணைக்கு…

சட்ட விரோதமான முறையில் தங்க நகைகளை எடுத்து வர முற்பட்ட நபர் விமான நிலையத்தில் கைது