(UTV|COLOMBO) தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களுடன் குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இதனுடன் இரத்தினபுரி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிகளவான கடும் மழை பெய்யக்கூடுவதுடன் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுடன் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் இடைக்கிடையில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.