சூடான செய்திகள் 1

கண்டி நகரத்தில் புதிய போக்குவரத்து வாகனத் திட்டம்

(UTV|COLOMBO) கண்டி நகரத்தில் நேற்று முதல் புதிய போக்குவரத்து வாகனத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் கண்டி நகரத்திற்கு வருகை தரும் மற்றும் வெளியேறும் நேர காலம் ஒன்றரை மணித்தியாலத்தில் இருந்து 25 நிமிடங்களாகக் குறைக்கக்கூடியதாக இருக்கும் என்று மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.

கட்டம்பேயில் இருந்து, புதிய வீதி ஊடாக கண்டிக்குள் பிரவேசித்து பழைய வீதி ஊடாக வெளியேறும் வகையில் இந்தப் புதிய போக்குவரத்துத் திட்டம் அமுலாகிறது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

 

 

 

Related posts

ஜுலை மாதம் முதல் ஓய்வூதியம் பெறுவோர்களின் சம்பள முரண்பாட்டை நீக்கும் திட்டம்

தயாசிறி ஜயசேகர குற்றப்புலனாய்வு பிரிவில் வாக்குமூலம்

எதிர்வரும் 09,10ம் திகதிகளில் ரயில்வே பணிப்புறக்கணிப்பு