சூடான செய்திகள் 1

வடமாகாண பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை…

(UTV|COLOMBO) சிவராத்திரி தின சமய அனுஷ்டானங்களை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி எதிர்வரும் 5ஆம் திகதி வடமாகாண பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அறிவித்துள்ளார்.

குறித்த தினத்தில் தனியார் கல்வி நிறுவனங்களும் மாணவர்களுக்கான விடுமுறையை வழங்குமாறும் ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை, குறித்த விடுமுறை தினத்திற்கு பதிலாக பிரிதொரு தினத்தில் பாடசாலையை நடத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் என வடமாகாண ஆளுனரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

கிளிநொச்சியில் வறுமையில் கல்விகற்கும் சில மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கி வைப்பு

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களுக்கு பஸ் போக்குவரத்து வரையறை தளர்வு

மோட்டார் சைக்கிளை கடத்திய சந்தேக நபர் கைது