வகைப்படுத்தப்படாத

இந்திய விமானப்படை வீரரை மீட்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்.

(UTV|INDIA) பாகிஸ்தான் சிறைபிடித்துள்ள இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை மீட்கும் நடவடிக்கையை துரிதப்படுத்தும் முகமாக மத்திய அமைச்சரவை இன்று (28) கூடவுள்ளது.

இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறிய பாகிஸ்தான் போர் விமானங்கள் விரட்டியடிக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் எல்லையில் நுழைந்த இந்தியாவின் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதுடன், இரண்டு விமானிகளை பாகிஸ்தான் சிறைப்பிடித்தது.

இந்நிலையில்,சிறைப்பிடிக்கப்பட்ட விமானியான அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பாகிஸ்தானிலுள்ள இந்திய தூதர் பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை குறித்த விமானியை பத்திரமாக மீட்கும் பொருட்டு மத்திய அமைச்சரவை இன்று(28) மாலை 6.30 மணிக்கு கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புல்வாமா தாக்குதலை தொடரந்து இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதுடன், தொடர் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

தேர்தல் பிரச்சாரம் முடிவுறும் திகதி அறிவிப்பு

Heavy traffic near Technical Junction

Nine SSPs promoted to DIG