(UTV|COLOMBO) சுத்தமான குடிநீரை வழங்கும் நோக்குடன் பிரஜா ஜலாபிமானி என்ற வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் ஹில்மி மொஹமட் தெரிவித்துள்ளார்.
அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களம் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. பிரஜாபிமானி திட்டத்தின் கீழ் ஆயிரம் கிராமங்களுக்கு குழாய் மூலம் சுத்தமான குடிநீர் வழங்கப்படவிருக்கிறது. எதிர்வரும் முதலாம் திகதி இந்த வேலைத்திட்டம் உத்தியோகபூர்வமாக கண்டி நகரில் ஆரம்பித்து வைக்கப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் இந்த வேலைத்திட்டம் விரிவான முறையில் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சின் பிரதம பொறியியலாளர் லெரோஷியன் கூறினார்.