விளையாட்டு

சனத் ஜயசூரியவிற்கு விதிக்கப்பட்ட தடை குறித்து கிரிக்கெட் சபை ஆராய்வு

(UTV|COLOMBO) இரண்டு வருடங்கள் கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட தடைவிதிக்கப்பட்டுள்ள சனத் ஜயசூரிய பற்றி இலங்கை கிரிக்கெட் சபை ஆராய்ந்து வருவதாக இலங்கை கிரிக்கெட்டின் உப தலைவர் ரவீன் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் இரண்டு கட்டுப்பாடுகளை மீறிய குற்றத்துக்காகவே இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான சனத்
ஜயசூரிய மீது இந்த இரண்டு வருட தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐ சி சி மேற்கொண்ட விசாரணைகளுக்காக எழுத்து மூல ஆவணங்களை பெற்றுக்கொடுக்காமை அந்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காமை மற்றும் அந்த ஆவணங்களை அழித்தல், காணமல் ஆக்குதல் போன்ற குற்றங்கள் சனத் ஜயசூரிய மேல் குற்றம் சாட்டப்பட்டிருந்தன.

இந்நிலையில் சனத் ஜெயசூர்ய தன் குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட்டின் உப தலைவர் ரவீன் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

அதேவேளை சனத் ஜயசூரிய இலங்கை கிரிக்கெட்டில் எந்த விதமான தொடர்புகளை தற்பொழுது வைத்தில்லை என்றாலும் அவர் நாட்டுக்கு செய்த சேவை என்ற அடிப்படையில் அவர் மேல் குற்றம் சாட்டப்பட்டுள்ள குற்றங்கள் தொடர்பில் தாங்கள் ஆராய்ந்து வருவதாகவும் இலங்கை கிரிக்கெட்டின் உப தலைவர் ரவீன் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இலங்கைக்கு முதல் இடம் (பட்டியல் இணைப்பு)

இலங்கை அணி வீரர்களுக்கு டெங்கு

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி