சூடான செய்திகள் 1

அரச நிறைவேற்று அதிகாரிகள் பணிபுறக்கணிப்பில்…

(UTV|COLOMBO) அரச நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றியம் இன்று(27) நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பள பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்தமையினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

15 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 15,000க்கும் அதிகமானவர்கள் இந்தப் பணிப்புறக்கணிப்பில் இணையவுள்ளதாக, அரச நிறைவேற்று அதிகாரிகள் ஒன்றிணைந்த குழுவின் செயலாளர் உதயசிறி தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

ரஞ்சன் நீதிமன்றில் முன்னிலை

டோகோ ஜனாதிபதி இலங்கைக்கு

மாகாண சபைத் தேர்தலினை பழைய முறையில் நடாத்த பாராளுமன்ற அனுமதி முக்கியம்