சூடான செய்திகள் 1

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணையை எதிர்வரும் மார்ச் 13ம் திகதி விசாரணைக்கு எடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இன்று(26) விசாரணைக்கு வந்த போது பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

பாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமான ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை வழக்கை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் சம்பந்தமாக கடந்த நவம்பர் மாதம் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்த கருத்துக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்கவின் இந்தக் கருத்து நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக தெரிவித்து அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

கல்கிஸ்ஸ பிரதேச வீடு ஒன்றின் மீது துப்பாக்கி பிரயோகம்

ரூபாவின் பெறுமதி 181.54 ஆக வீழ்ச்சி

அமித் ஜீவன் வீரசிங்க மற்றும் 9 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்