சூடான செய்திகள் 1

கடந்த 02 வருட காலத்தினுள் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

(UTV|COLOMBO) சிறுநீரக நோய் நிவாரணத்திற்காக முன்னெடுக்கப்பட்ட விரிவான வேலைத்திட்டங்கள் காரணமாக, கடந்த 02 வருட காலத்தினுள் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தேசிய சிறுநீரக நிதியத்தின் 628 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கண்டி பொது மருத்துவமனையுடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறுநீரக நோய் பராமரிப்பு மற்றும் நலன்பேணல் நிலையம் நேற்று(25) மக்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வினை தொடர்ந்து கண்டி கெடபே விளையாட்டரங்கில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.

அரச நிதி ஒதுக்கீட்டினை பெற்றுக்கொள்ளாது முற்றுமுழுதாகவே தேசிய சிறுநீரக நிதியத்தின் நிதி ஒதுக்கீட்டில் இந்நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

சிகிச்சை முறைகள் பலப்படுத்தப்பட்டதோடு, நோய் நிவாரணங்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும், இதன்போது பௌதீக வளங்களை போன்றே மனித வளங்களும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதனபோது சுட்டிக்காட்டினார்.

மேலும் சிறுநீரக நோயாளர்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவுகள் அந்நோயினால் அவதியுறும் சகலருக்கும் வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டினார்.

மேலும், மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் விரிவான வேலைத்திட்டங்களினூடாக இந்நோயினால் பீடிக்கப்படுவதை தடுப்பதற்கு பின்பற்ற வேண்டிய வழி முறைகளை அவர்கள் தமது தனிப்பட்ட வாழ்க்கை முறையில் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன்போது. சுட்டிக்காட்டினார்.

 

 

 

 

Related posts

மூன்று மாதங்களுக்கு முன் உயிரிழந்த பெண்ணின் எலும்புக் கூடு கண்டுபிடிப்பு

பாடசாலை தவணை பரீட்சை தொடர்பில் எதிர்வரும் தினங்களில் இறுதித் தீர்மானம்

நாடளாவிய ரீதியில் இலங்கை ஆசிரியர் சங்கம் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க தீர்மானம்