(UTV|COLOMBO) பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக பொலிஸார் தாக்கல் செய்த வழக்கை எதிர்வரும் மே மாதம் 13 ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று(25) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் செயித் ரால் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது, மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டமை தொடர்பில் விமல் வீரவங்ச, ஜெயந்த சமரவீர, வீரகுமார திஸாநாயக்க ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான ரொஜிர் செனவிரத்ன, பியசிறி விஜேரத்ன, முஹமட் முஸாமில் ஆகியவர்களுக்கு எதிராக கறுவாத்தோட்ட பொலிஸார் குறித்த வழக்கை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.