சூடான செய்திகள் 1

கிளிநொச்சி மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பு

(UTV|COLOMBO) காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டியும் ஆரம்பமாகும் ஜெனிவா மனித உரிமைகள் சபை அமர்வை முன்னிறுத்தியும் வடகிழக்கு பகுதிகளில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று(25) முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் முழு அடைப்புப் போராட்டத்திற்கும் ஆதரவாக வடக்கு முழுமையாக முடங்கியுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதனால் மாவட்டத்தின் அரச சேவைகள், போக்குவரத்து, பாடசாலை என பல்வேறு பகுதிகளும் முடக்கப்பட்டுள்ளது

அனைத்து வரத்தக நிலையங்களும் பூட்டப்பட்டுள்ளதுடன், சேவை சந்தையில் கறுப்பு கொடி கட்டப்பட்டு ஹர்த்தால் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளிற்கு மாணவர்கள் வருகை தராமையால் பாடசாலை வெறிச்சோடி காணப்படுவதுடன், இதேவேளை, பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை. கிளிநொச்சி மாவட்டம் முழுவதும் பூரண ஹர்த்தால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

 

 

 

 

 

 

 

 

Related posts

சோள உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

ஜனாதிபதி – தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையில் கலந்துரையாடல்

4 மணித்தியாலங்கள் எதிர்ப்பு பணி புறக்கணிப்பு