சூடான செய்திகள் 1

இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO) சில நாட்களுக்கு நாட்டின் தென் அரைப்பாகத்தில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பல தடவைகள் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீட்டர் அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

 

 

 

 

Related posts

SLT “Voice App”அறிமுகம்

இலங்கை சுங்கத்தின் பதில் பணிப்பாளர் நியமனம்

பொலிஸார் இஸ்லாம் அடிப்படைவாதிகளிடம் பணம் பெறுகின்றனர் -ஞானசார தேரர்