கிசு கிசு

கெத்து காட்டிய இலங்கை!-ரசலுக்கு தென்னாபிரிக்க முன்னாள் வீரரால் தாக்குதல்…?

தென்னாபிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி கைப்பற்றிய நிலையில், முன்னாள் வீரர் ரசுல் அர்னால்டை தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் நிதினி மைதானத்தில் செல்லமாக அடித்து விரட்டும் புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இலங்கை அணி தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய 02 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி தொடரினை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. எந்த ஒரு ஆசிய அணியும் தென்னாபிரிக்க மண்ணில் இதுவரை படைக்காத சாதனையை இலங்கை அணி படைத்துள்ளது.

இந்த வெற்றியை இலங்கை அணி வீரர்கள் வெகு விமர்சியாக கொண்டாடுகிறார்களோ? இல்லையோ? அந்தணியின் முன்னாள் ரசுல் அர்னால்டு இந்த வெற்றியை மிகவும் உணர்ச்சிவசமாக கொண்டாடி வருகிறார்.

அந்த வகையில் அணியின் வெற்றிக்கு பின் அர்னால்டு பேட்டி ஒன்றிற்காக மைதானத்தில் பேசிக் கொண்டிருந்த போது, அப்போது அவருக்கு பின்னால் வந்த தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நிதினி கோபத்தில் அவரை விரட்டுகிறார். இதை இரண்டு பேருமே ஒரு விளையாட்டாக எடுத்துக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

Related posts

கொள்ளுப்பிட்டி பிராண்டிக்ஸ் 07 பேருக்கு கொரோனா : ஒருவர் தெஹிவளை

எதிர்வரும் 72 மணித்தியாலங்கள் தீர்மானமிக்கது

பொலிஸாரை கெட்ட வார்த்தையில் திட்டித் தீர்த்த மருத்துவர்…