சூடான செய்திகள் 1

கடல் எல்லையை மீறும் மீனவர்கள் மீது கடுமையான சட்டம்

(UTV|COLOMBO) இலங்கை கடல் எல்லையை மீறும் வௌிநாட்டு மீனவர்கள் மீதான சட்டத்தை கடுமையாக்கவுள்ளதாக, கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பிலான 2 சட்டமூலங்களில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக, திணைக்களத்தின் தேடுதல் பிரிவின் பணிப்பாளர் கல்யாணி ஹேவாபத்திரண தெரிவித்துள்ளார்.

கடந்த மாதத்தில் மாத்திரம் 15 இந்திய மீனவர்கள் 7 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதிய சட்டங்களின் அடிப்படையில் குறித்த 7 படகுகள் மீதும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் திணைக்களத்தின் தேடுதல் பிரிவின் பணிப்பாளர் கூறியுள்ளார்.

அதேவேளை, கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை, இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மீண்டும் இந்தியாவிற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் திணைக்களத்தின் தேடுதல் பிரிவின் பணிப்பாளர் கல்யாணி ஹேவாபத்திரண தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

காலநிலையில் மாற்றம்

கிளிநொச்சி மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பு

பகிடிவதை குறித்த முறைப்பாடுகளிற்காக அவசர தொலைபேசி இலக்கம்