சூடான செய்திகள் 1

காலநிலையில் மாற்றம்…

(UTV|COLOMBO) நாளையிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென் அரைப்பாகத்தில் குறிப்பாக ஊவா மாகாணத்தில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

 

 

 

 

Related posts

உணவு ஒவ்வாமை காரணமாக 70 பேர் வைத்தியசாலையில்

மாத்தறை நகைக்கடை கொள்ளை – ஒருவர் கைது

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான மனு 30 ஆம் திகதி விசாரணை