வகைப்படுத்தப்படாத

புல்வாமா தாக்குதல் – அமெரிக்காவில் இந்தியர்கள் ஆர்ப்பாட்டம்

(UTV|COLOMBO) புல்வாமா தாக்குதலைக் கண்டித்து அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு இந்தியர்கள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் திகதி நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலில், துணை இராணுவப் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி பிற நாடுகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

அவ்வகையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் அருகில் இந்தியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று புல்வாமா தாக்குதலைக் கண்டித்தும், பாகிஸ்தானுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர் என தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

Related posts

பாதாள உலகத்தவர்களை முற்றாக ஒழிப்பதற்கு ஆறுமாதகால அவகாசம்

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வனாட்டு தீவில் 6.0 ரிகட்ர் அளவில் நிலநடுக்கம்