விளையாட்டு

இலங்கை அணி 2-0 என்ற அடிப்படையில் தொடரைக் கைப்பற்றியது

(UTV|COLOMBO) இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் இலங்கை அணி 08 விக்கட்டுக்களால் வெற்றி பெற்று தொடரை இலங்கை அணி 2-0 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.

தென்னாபிரிக்காவின் போர்ட் எலிசபெத் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் நாணயசுழற்சியை வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்ஆப்பிரிக்கா அணி 61.2 ஓவரில் 222 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதனையடுத்து போட்டியின் முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 154 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.

இரண்டாவது இன்னிங்சில் தென்னாபிரிக்க அணி 128 ஓட்டங்களைப் பெற்று அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 02 விக்கட் இழப்பில் 197 ஓட்டங்களைப் பெற்று 08 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

 

 

 

Related posts

சன்ரைஸஸ் அணி வீழ்ந்தது

LPL போட்டியில் விளையாட 11 நாடுகளின் வீரர்கள் விருப்பம்

ஓப்பன் டென்னிஸ் தொடரிலிருந்து நடால் விலகல்