வணிகம்

தேயிலை ஏற்றுமதி அதிகரித்துள்ளது

(UTV|COLOMBO) கடந்த ஜனவரி மாதத்தில் நாட்டின் தேயிலை ஏற்றுமதி 23 தசம் ஆறு மெற்றிக் தொன்னாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடத்தின் முதல் மாதத்துடன் ஒப்பிடு கையில், இது இரண்டு தசம் ஏழு மெற்றிக் தொன் அதிகரிப்பாகும் என்று Forbes & Walker தரகு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதேவேளை, ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட பழ உற்பத்தியை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளை இலக்காகக் கொண்டு பழங்கள் உற்பத்தி செய்யப்படவிருக்கின்றன என தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

Related posts

டொலரின் பெறுமதியை குறைக்க விசேட திட்டம்…

இலங்கைக்கு கடன் உதவி வழங்கிய ஆசிய அபிவிருத்தி வங்கி

புத்தாண்டில் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கும்