சூடான செய்திகள் 1

ரத்மக சம்பவம் – வர்த்தகர்கள் கொலை செய்யப்பட்டு சடலம் எரிக்கப்பட்டுள்ளது

(UTV|COLOMBO)-காலி – ரத்கமவில் கடத்தப்பட்ட வர்த்தகர்கள் இருவரும் அக்மீமன – கோனமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கொலை செய்யப்பட்டு, வலஸ்முல்ல – மெதகொடை பிரதேசத்தில் தீ வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்கமவில் ரத்கம – உதாகம பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய ரசேன் சிந்தக மற்றும் 33 வயதுடைய மஞ்சுள அசேல ஆகியோர் கொலை செய்யப்பட்டு பின்னர் சடலம் எரிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இதனைக் கூறியுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தென் மாகாண விஷேட விசாரணை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கபில நிசாந்த மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்

 

 

 

Related posts

எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை சபாநாயகர் மீளவும் அறிவித்தார்

சந்தைகளில் தரம் குறைந்த பருப்பு விற்பனை

தெமட்டகொடை– மஹவில கார்டினில் அமைந்துள்ள வீட்டை CID யினர் பொறுப்பேற்றனர்