சூடான செய்திகள் 1

ஹோட்டன் சமவெளியில் வண்டுகளை பிடித்த இருவர் கைது

(UTV|COLOMBO) உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவில் பூச்சி இனங்களை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லும் மோசடியில் ஈடுபட்டிருந்த சீன பிரஜைகள் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சீன பிரஜைகளிடமிருந்து தேசிய பூங்காவில் இருந்து பிடிக்கப்பட்டிருந்த 10 வண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவின் பொறுப்பாளருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சீன பிரஜைகள் நுவரெலிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

 

 

 

Related posts

UPDATE-புதிய அமைச்சர்கள் விபரம் இதோ…

புகையிரத்தில் மோதி மூன்று யானைகள் உயிரிழப்பு

விசா இன்றி தங்கியிருந்த இந்தியப் பிரஜை ஒருவர் கைது