கிசு கிசு

டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு?

(UTV|AMERICA) வடகொரியாவுடனான அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுத்ததற்காக ஜனாதிபதி டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரை செய்ய வேண்டும் என ஜப்பானுக்கு அமெரிக்கா கோரிக்கை வைத்தது.

அணு ஆயுத சோதனைகள் மூலம் ஜப்பான் உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தது வடகொரியா. இதற்கு தீர்வு காணும் விதமாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் தணிந்தது.

இந்நிலையில் வடகொரியாவுடனான அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுத்ததற்காக ஜனாதிபதி டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரை செய்ய வேண்டும் என ஜப்பானுக்கு அமெரிக்கா கோரிக்கை வைத்தது.

அதனை ஏற்று, டிரம்பின் பெயரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு, ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே பரிந்துரைத்துள்ளார். அத்துடன் அவர் பரிந்துரை கடிதத்தின் நகலை வெள்ளை மாளிகைக்கு அனுப்பிவைத்தார். வாஷிங்டனில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட டிரம்ப், இந்த தகவலை தெரியப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

மனைவி தூங்குவதற்கு மார்க் ‌ஷகர் பெர்க் செய்த காரியம்?

தாமரை கோபுரத்தினால் திடீரென ஏற்பட்ட ஆபத்து!

வன ஜீவராசிகளின் உயிருக்கு கேள்விக்குறி [PHOTOS]