கிசு கிசுவிளையாட்டு

பாகிஸ்தான் T-20 கிரிக்கெட் போட்டிகளுக்கான ஸ்பான்சர் நிதியுதவி நிறுத்தம்

(UTV|PAKISTAN) புல்வாமா தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் சூப்பர் லீக் இருபதுக்கு -20 கிரிக்கெட் போட்டிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஸ்பான்சர் நிதியுதவியை நிறுத்தப் போவதாக, ஐ.எம்.ஜி-ரிலையன்ஸ் நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு வர்த்தக முன்னுரிமை நாடு என்ற சலுகையை மத்திய அரசு இரத்து செய்தது. அதுமட்டுமன்றி பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பால் பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கு 200% வரி விதித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக, பாகிஸ்தானை வர்த்தக ரீதியாக தனிமைப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம் இதுவரை பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஸ்பான்சரை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளுக்கு தயாரிப்பு பங்குதாரராக இருந்து வரும் ரிலையன்ஸ், போட்டிகள் நடப்பது, போட்டி ஒளிபரப்பு, விளம்பரம் என அனைத்தையும் ஒருங்கிணைத்து வருகிறது.

அத்துடன் பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒளிபரப்பும் உரிமை மற்றும் நடவடிக்கைகளை ஐ.எம்.ஜி ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிற இந்நிலையில் தான் புல்வாமா தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஸ்பான்சர், நிதியுதவி என அனைத்தையும் நிறுத்துவதாக ரிலையன்ஸ் அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகளுக்கு முக்கியமான ஸ்பான்சராக விளங்கி வரும் பாகிஸ்தானுக்கு, இந்த அறிவிப்பு பெரும் பின்னடைவு ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

 

 

 

 

Related posts

நிர்வகிக்க தெரியாத அரசாங்கம் இது?

முதல் நாள் ஆட்ட முடிவில் மேற்கிந்திய தீவுகள் பெற்ற ஓட்டங்கள்

மரியா ஷரபோவா டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிப்பு