வணிகம்

கித்துள் தொழில் துறைக்கென அதிகார சபை

(UTV|COLOMBO) சப்ரகமுவ மாகாண சபை கித்துள் தொழில் துறைக்கென அதிகார சபையை ஆரம்பித்துள்ளது.

இதன் ஆரம்ப வைபவம் இரத்தினபுரியில் உள்ள மாகாண ஆளுநர் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் சமீபத்தில் நடைபெற்றது. கித்துள் தொழில்துறையை அரசாங்கத்தின் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட முதலாவது நிறுவனம் இதுவாகும். இந்தத் தொழில் துறையில் ஈடுபட ஆர்வம் உள்ளவர்களை ஊக்குவிப்பதற்கு இந்த அதிகாரசபையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளமை விசேட அம்சமாகும். இதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ ஆளுநர் தம்ம திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

புழக்கத்திற்கு விடப்படவுள்ள புதிய 20 ரூபா நாணயம்

இந்த வருடம் டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல் வருடமாக பிரகடனம்

பால்மாவின் விலையை அதிகரிக்குமாறு பால்மா நிறுவனங்கள் கோரிக்கை