பங்களாதேஷின் கிரிக்கெட் வீரர் மஹமதுல்லாஹ் மற்றும் நியூஸிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்ட் ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது, போட்டி விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் ஹமதுல்லாவிற்கு போட்டி ஊதியத்தில் 10 வீதமும் நியூஸிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்ட்டுக்கு 15 வீதமும் அபராதம் விதிக்கப்ப்டடுள்து.
போட்டியில், ஆட்டமிழந்து செல்லும் போது, மைதானத்தின் சொத்துக்களுக்கு மட்டையினால் சேதம் விளைவித்ததாக மஹமதுல்லா மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை பந்து வீசும் சந்தர்ப்பத்தில் வீண் வார்த்தைகளை பிரயோகித்ததாக ட்ரென்ட் போல் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.