சூடான செய்திகள் 1

பாராளுமன்ற உறுப்பினர்களின் இலவச தபால் கொடுப்பனவு அதிகரிப்பு…

(UTV|COLOMBO)-பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கான இலவச தபால் கொடுப்பனவை மேலும் அதிகரிப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு, ஒரு வருடத்திற்கு வழங்கப்பட்ட 1,75,000 ரூபா இலவச தபால் கொடுப்பனவு 3,50,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபை உறுப்பினர் ஒருவருக்கு 24,000 ரூபா வழங்கப்பட்டது.

புதிய வர்த்தமானி அறிவித்தலின்படி, மாகாண சபை உறுப்பினர் ஒருவருக்கான இலவச தபால் கொடுப்பனவு 48,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

Related posts

வவுனியா வாகன விபத்தில் 5 பேர் பலி

லோட்டஸ் சுற்றுவட்டம் மூடப்பட்டது!

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் தொடர்ந்தும் அதிகரிப்பு